திண்டுக்கல்

‘நிலக்கரி வழங்க மத்திய அரசு மறுப்பதால் மாநிலங்களில் மின்உற்பத்தி பாதிப்பு’

DIN

நிலக்கரி வழங்க மத்திய அரசு மறுத்து வருவதால், பல்வேறு மாநிலங்களுக்கு மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக் குழு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சசிகலா அரசியல் பிரவேசத்தின் மூலம், அதிமுகவுக்குள் ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி அந்தக் கட்சியை கபளீகரம் செய்வதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியல் யுத்தியை தமிழகத்திலும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு நிலக்கரியை கொடுக்க மத்திய அரசு மறுத்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டு பல மாநிலங்களில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் கருத்து ஆபத்தானது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே நல்லது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கல்லூரிகள் தொடங்குவது வரவேற்கத்தக்கது.

அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.

அப்போது மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.ஆா்.கணேசன், பி.செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT