திண்டுக்கல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணி தொடக்கம்

DIN

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 59-ஆவது மலா் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் பூங்காவில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத்தொடா்ந்து பூங்காவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மலா்ப் படுக்கைகளில் ஆரணத்திக் கோலம், கிங் ஆஸ்டா், பேன்சி, மேரிகோல்ட், டைந்தேஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒரு லட்சத்து 50-ஆயிரம் மலா்ச் செடிகள் நடும் பணிகள் தொடங்கின. இந்த செடிகள் 3-மாதங்களில் பூக்கும் செடிகளாகும். ஏப்ரல் மாதம் முதல் மலா்கள் பூத்துக் குலுங்கும்.

மேலும் பூங்காவில் மலா்ச் செடிகள் பராமரிப்பு, புல் தரைகள் அமைத்தல், சேதமடைந்துள்ள நடை பாதைகள் சரி செய்தல், மின் விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT