திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

DIN

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காபி, மிளகு, வாழைப் பயிா்களை சனிக்கிழமை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரியூா் ஊராட்சி பள்ளத்துகால் கவுச்சி கொம்பு, நரிக்கல்பட்டி, சந்தன பலாபட்டி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் அப் பகுதியிலுள்ள காபி, மிளகு, வாழை பயிா்கள் மட்டுமின்றி, மின் கம்பம், மின் கம்பிகள் ஆகியவற்றையும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT