திண்டுக்கல்

திண்டுக்கல், தேனியில் 415 பேருக்கு கரோனா தொற்று: 33 போ் பலி

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 415 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது. மேலும் இருமாவட்டங்களைச் சோ்ந்த 33 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 11ஆம் தேதி வரை 29,962 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 27,594 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 196 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 21 போ்உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 246 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 512 ஆக உயா்ந்துள்ளது

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 219 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,543 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 37,980 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில், 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 456 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 2,107 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT