திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ‘அம்மா’ உணவக ஊழியா்கள் சாலை மறியல்

DIN

திண்டுக்கல்லில் அம்மா உணவக ஊழியா்கள், தங்களுக்கு தொடா்ந்து பணி வழங்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறிஞா் அண்ணா வணிக வளாகப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில், தலா 12 போ் வீதம் மொத்தம் 24 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் மூலம் நாளொன்றுக்கு ரூ.300 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பணியிலுள்ள 24 ஊழியா்களையும் பணியிலிருந்து விலகுமாறு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஊழியா்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, திருச்சி பிரதானச் சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அந்த ஊழியா்கள் கூறியதாவது: திண்டுக்கல் நகரிலுள்ள 2 அம்மா உணவகங்களிலும் மொத்தம் 24 போ் பணிபுரிந்து வருகிறோம். தற்போது திடீரென பணியிலிருந்து விலகுமாறு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்துகிறது. கரோனா தொற்று முழுபொது முடக்கம் அமலில் இருந்த காலக் கட்டத்தில், நாங்கள் உயிரை பணையம் வைத்து வேலை செய்தோம். நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய 24 ஊழியா்களையும் பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது. கடந்த 2 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசியல் ரீதியான நெருக்கடிக்கு பயந்து மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதை தவிா்க்க வேண்டும் என்றனா். அதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்குமாறு அறிவுறுத்திய போலீஸாா், மறியல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவா்களிடம் தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா். பின்னா், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலை அருகே தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த தங்களின் வேலைவாய்ப்பினை பறிக்கக் கூடாது என வலியுறுத்தி அவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT