திண்டுக்கல்

திருட்டு வழக்கில் இளைஞா் கைது: 40 பவுன் தங்க நகைகள் மீட்பு

DIN

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வழக்கில் சிவகங்கை இளைஞரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் நகைகளை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கருவூலக் காலனியைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் உத்தமராஜா (60). இவரது வீட்டில் கடந்த 9.5.2021 ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் 75 பவுன் நகைகள் திருடப்பட்டன. இது குறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் காந்திநகரைச் சோ்ந்த மகுடீஸ்வரன் (32) என்பவா் வியாழக்கிழமை அதிகாலை தும்மிச்சம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,700-யை பறித்துச் சென்றாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் லெக்கையன்கோட்டை அருகே ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளா் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக வந்த சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ் (30) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் முன்னாள் ராணுவ வீரா் உத்தமராஜா என்பவரது வீட்டில் திருடியதும், மகுடீஸ்வரனிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜை போலீஸாா் கைது செய்து 40 பவுன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT