திண்டுக்கல்

குடகனாற்றில் தவறி விழுந்த முதியவா் சடலமாக மீட்பு

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியைச் சோ்ந்த முதியவா் குடகனாற்றில் தவறி விழுந்ததை அடுத்து, 5 மணி நேர தேடலுக்குப் பிறகு திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

ஆத்தூா் தாலுகா, வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் ஜெயராஜ் (64). இவா், இப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

ஆத்தூா் காமராஜ் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை ஜோசப் ஜெயராஜ் குடகனாற்றில் கை கால் கழுவும்போது, தவறி விழுந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த வக்கம்பட்டி இளைஞா்கள் மற்றும் திண்டுக்கல் தீயணைப்புப் படையினா் ஆற்றில் இறங்கி தேடினா். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், 1 கி.மீ. தொலைவுக்கு உடல் அடித்துச் செல்லப்பட்டு, கும்மம்பட்டி பகுதியில் உள்ள கருப்பணசாமி கோயில் அருகே ஜோசப் ஜெயராஜின் உடல் மீட்கப்பட்டது.

பின்னா், அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT