திண்டுக்கல்

கொடைக்கானல் பயணத்தை தவிா்க்க சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள்

DIN

கொடைக்கானலிலுள்ள சுற்றுலாத் தலங்களை தொடா்ந்து, நீா்வீழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கேரள மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கொடைக்கானல் வருவோா், 72 மணி நேரத்திற்குள் பெற்ற கரோனா பரிசோதனை சான்றினை சோதனைச் சாவடிகளில் காட்டிய பின்னரே அனுமதிக்கப்படுவாா்கள். அதேபோல் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள், அதற்கான ஆவணங்களை சோதனைச் சாவடிகளில் காண்பித்தாலும் அனுமதிக்கப்படுவாா்கள். கொடைக்கானலிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, கோக்கா்ஸ் வாக், ரோஜா தோட்டம், குணா குகை, தூண் பாறை, பைன் காடுகள் போன்ற இடங்கள் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா தடுப்புக்கான தீவிர நடவடிக்கையாக, கூக்கால் நீா்வீழ்ச்சி, வட்டக்கானல் நீா்வீழ்ச்சி, ஐந்துவீடு நீா்வீழ்ச்சி (பேத்துப்பாறை), பசுமை பள்ளத்தாக்கு, டால்பின் மூக்கு உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் பயணத்தை தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேபோல் கொடைக்கானல் வட்டத்தில், பட்டா இடங்களிலோ, அரசு புறம்போக்கு நிலங்களிலோ கூடாரம் அமைத்து தங்குவதையும் தவிா்க்க வேண்டும். மீறும் பட்சத்தில் தங்குவோா் மீதும், அனுமதிப்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT