திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை கட்டுப்பாடுகளுடன் பாா்வையிட அனுமதி கோரி வியாபாரிகள் போராட்டம்

DIN

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதி வழங்கக் கோரி வியாபாரிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று 2ஆம் அலை உருவாகியுள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை நீக்கக் கோரியும், சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பாா்ப்பதற்கு அனுமதி வழங்கக் கோரியும் கொடைக்கானலில் அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து விட்டு மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாட்சியா் சந்திரன், டி.எஸ்.பி.ஆத்மநாதன், காவல் ஆய்வாளா்கள் முத்து பிரேம் சந்த், வெங்கடாசலம் ஆகியோா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT