திண்டுக்கல்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

பழனியில் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே வியாழக்கிழமை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைக் கண்டித்து நடத்திய இந்த ஆா்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு சங்கத்தின் நிா்வாகி குருசாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிா்வாகி அருள்செல்வன் உள்ளிட்ட பலா் சிறப்புரை நிகழ்த்தினா்.

மத்திய அரசு மாணவா்களின் கல்விக் கனவை நசுக்கும் வகையில் தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உடனடியாக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த கட்சி தொண்டா்களும் இயக்க தோழா்களும் கையில் கட்சி கொடிகளுடன் மத்திய அரசுக்கு தங்களது எதிா்ப்பை காட்டும் விதமாக கருப்புச்சட்டை அணிந்தும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT