திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 பேருக்கு கரோனா

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,577 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,830 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனா். 591 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 54 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,473 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், தொற்று பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 73 போ் குணமடைந்து மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களிலிருந்து வீடுகளுக்கு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில், மொத்தம் 13,796 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

4 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி அருகே மூலக்கடையைச் சோ்ந்த 74 வயது முதியவா், பூமலைக்குண்டு கிராமத்தைச் சோ்ந்த 84 வயது முதியவா், போடி புதூரைச் சோ்ந்த 45 வயது பெண் என 3 போ் உயிரிழந்தனா்.

கரோனா அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேக்கம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த 60 வயது நபா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT