திண்டுக்கல்

கொடைக்கானலில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

21st Sep 2020 02:21 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. 

கொடைக்கானல் மலைப் பகுதிகளான கொடைக்கானல், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனுர், பூண்டி, கிளாவரை, கூக்கால், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, அடங்கல், ஜாதிச் சான்றுகள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை மற்றும் கிராமப் பகுதிகளில் சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்து தீர்வு காண்பார்கள். 

தற்போது கரானா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதால் கொடைக்கானலிலேயே மக்கள் குறைதீர்க்கும் முகாம் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள், விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அரவிந்த் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுமார் 100 மனுக்கள் பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விசாரனை நடைபெற்றது.
 

ADVERTISEMENT

Tags : Kodaikanal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT