திண்டுக்கல்

புறம்போக்கு நிலத்தை காலி செய்ய மறுத்துபொதுமக்கள் போராட்டம்

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் பொதுமக்கள், மாற்று இடத்துக்குச் செல்ல மறுத்து குடிசை மாற்று வாரிய அலுவலா்களை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாநகராட்சி 1ஆவது வாா்டுக்குள்பட்ட அய்யன்குளம் பகுதியில் சுமாா் 5 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில், கடந்த 100 ஆண்டுகளாக 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். புறம்போக்கு இடத்தில் வசித்துவரும் இந்த பொதுமக்களை, வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையிலுள்ள குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் இருவா், அய்யன்குளம் பகுதி பொதுமக்களை சனிக்கிழமை சந்திக்க வந்தனா். அப்போது, புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் குடும்பத்தினா் இடமாற்றம் செய்யப்பட உள்ள விவரம் குறித்து தெரிவித்தனா். குடியிருந்து வரும் பொதுமக்களின் ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க முயன்றனா். ஆனால், இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த அய்யன்குளம் பகுதி மக்கள், 3 தலைமுறையாக வசித்து வரும் இடத்திலிருந்து வெளியேற முடியாது எனக் கூறி, அலுவலா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பின்னா், பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட 2 அலுவலா்களையும் போலீஸாா் மீட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT