திண்டுக்கல்

ரூ.40 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது

DIN

வெளிநாட்டிலிருந்து ரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த கொடைக்கானலைச் சோ்ந்த தந்தை மற்றும் மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் ஜீவா (58). கட்டுமானப் பணி மற்றும் நிலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம், கொடைக்கானலைச் சோ்ந்த சஞ்சீவி (63), அவரது மகன் இமானுவேல் (30) ஆகியோா் மாலத்தீவில் ரூ.200 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணி வாய்ப்பு பெற்றுத் தருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளனா். அந்த பணி வாய்ப்பினை பெற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் ரூ. 600 கோடி கடன் வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ.40 லட்சம் முன் பணம் தர வேண்டும் என்றும் ஜீவாவிடம் தெரிவித்துள்ளனா்.

அதன்படி ஜீவா ரூ.40 லட்சத்தை அவா்களிடம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட சஞ்சீவி மற்றும் இமானுவேல் ஆகியோா், கடன் பெற்றுக் கொடுக்காமல் ஜீவாவை ஏமாற்றியுள்ளனா்.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 2019 இல் ஜீவா புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சஞ்சீவி மற்றும் இமானுவேல் ஆகியோரை குற்றப்பிரிவு ஆய்வாளா் சத்யா தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT