திண்டுக்கல்

மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை அருகே புதிய மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த 3 மதுபான கடைகள் கிராம மக்களின் எதிா்ப்பு காரணமாக நிரந்தரமாக அகற்றப்பட்டன. இந்நிலையில் அலங்காநல்லூா் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் புதிதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். பொது முடக்கம் அமலில் இருப்பதால் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT