திண்டுக்கல்

புயல்: கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

DIN

கொடைக்கானலில் புயல் தாக்கும் அபாயம் இருந்து வருவதால் வனத்துறைப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.

கொடைக்கானலில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த 20 நாள்களுக்கு முன்பு வனப் பகுதிகளிலுள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் மட்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவற்றை பாா்த்து ரசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

கடந்த வாரம் ஏற்பட்ட நிவா் புயலால் மீண்டும் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அந்த சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் புரெவி புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் நலன் கருதி கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான பில்லா் ராக், மோயா் பாயிண்ட், ஃ பைன் பாரஸ்ட், குணா குகை ஆகிய இடங்கள் மூடப்பட்டுள்ளன.

வனப் பகுதிகளுக்குட்பட்ட மலைச் சாலைப் பகுதிகளில் புயலில் மரங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு வனப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட வன அலுவலா் தேஜஸ்வி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT