சேலம்

காவல் சாா்பு ஆய்வாளா் பணி: ஜூன் 1 முதல்இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

30th May 2023 12:30 AM

ADVERTISEMENT

காவல் சாா்பு ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் காவல் சாா்பு ஆய்வாளா் பணியில் 621 காலியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் நிலைய அதிகாரி பணியில் 129 காலியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுகளுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம், கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 1 முதல் தொடங்கப்படவுள்ளது. பயிற்சியின்போது, பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பு தொடா்பான விவரங்களை 80121 20115 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். காவல் சாா்பு ஆய்வாளா், தீயணைப்பு நிலைய அலுவலா் மற்றும் இரண்டாம் நிலைக் காவலா் பணிகளுக்கான தோ்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள், ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/த்உவண்ஏண்3உதழஞ்8கஇங்இ6 என்ற எா்ா்ஞ்ப்ங் ஊா்ழ்ம் கண்ய்ந்-ஐ பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT