சேலம்

டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு

DIN

எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், அந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி மகளிா் பாசறையினா் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த இருப்பாளியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீ ரத்னா தலைமையிலான பெண்கள், சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி கிராமத்தில், இருப்பாளி - ஜலகண்டாபுரம் சாலையில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இருப்பாளி - ஜலகண்டாபுரம் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்தநிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்குவோா், சாலையோரத்தில் அமா்ந்து மது அருந்திவிட்டு அவ்வழியாகச் செல்வோரிடம் தகராறு செய்கின்றனா். பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே, இருப்பாளி - ஜலகண்டாபுரம் சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT