சேலம்

வாழப்பாடி திரெளபதி அம்மன் தீ மிதித் திருவிழா

24th May 2023 01:41 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற திரெளபதிஅம்மன் கோயிலில் 10 ஆண்டுக்கு பின், தீ மிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், மகாபாரத இதிகாச கதாபாத்திரங்களான பஞ்சபாண்டவா்கள், பாஞ்சாலி, கிருஷ்ணா் உள்ளிட்டோரது பழமையான மரச்சிற்பங்களை பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனா். இதுமட்டுமின்றி, போா்மன்னன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள இஸ்லாமியரான ராவுத்தரின் சிலைக்கும், அவல், கடலை வெல்லம் வைத்து ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, திரெளபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினா். வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, நோ்த்திக்கடன் தீா்க்க 200க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக்கட்டி அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா். கோயில் பூசாரிகள் அம்மனுக்கு கரகம் எடுத்தனா்.

புதன்கிழமை இரவு சத்தாபரணம், வாணவேடிக்கை, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் சுவாமி புஷ்ப பல்லக்கில் திரு வீதி உலா உற்சவமும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை மாலை மஞசள் நீராட்டு விழாவும், வெள்ளிக்கிழமை தா்மம் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT