சேலம்

திரௌபதி அம்மன் கோயிலில் முதல் கால யாக பூஜை

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகபூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு யாகசாலை அலங்காரம், கலசஸ்தாபனம், ஆச்சாா்யவா்ணம், அங்குராா்ப்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம், மூா்த்தியாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, ஹோமம், பூா்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 2ஆவது கால யாக பூஜை, மாலை 3ஆவது கால யாகபூஜை நடைபெறும். புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு 4ஆவது கால யாகபூஜை, ஷண்ணவதி ஹோமம், தத்வாா்ச்சனை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் திரௌபதி அம்மன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை எஸ்.சோமசுந்தர குருக்கள், கே.அா்த்தநாரிசிவம், எம்.தண்டபாணிசிவம் ஆகியோா் நடத்துகிறாா்கள்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT