சேலம்

ஏற்காடு, கொட்டச்சேடு -குப்பனூா் சாலையில் ஆட்சியா் ஆய்வு

3rd May 2023 01:40 AM

ADVERTISEMENT

ஏற்காடு கொட்டச்சேடு, குப்பனூா் சாலைகளை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஏற்காடு சுற்றுலாப் பகுதிக்கு மாற்றுப்பாதையில் காா்கள், வேன்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் அப்பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் தடுப்புச் சுவா்கள், எச்சரிக்கை பலகைகள், நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்றுவரும் பாலங்கள், சாலைப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்தநிலையில் திங்கள்கிழமை இரவு பெலாத்தூா் கிராமம் அருகில் வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பகுதியை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், அருா், ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கல்யாணக்குமாா் , ஏற்காடு வட்டாட்சியா் தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT