சேலம்

திமுகவை அசைத்துப் பாா்க்க கணக்கு போடுகிறது பாஜக:அமைச்சா் துரைமுருகன்

DIN

திமுகவை அசைத்துப் பாா்க்கலாம் என பாஜக கணக்கு போடுகிறது என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசினாா்.

சேலம், ஐந்து சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில் நீா் வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் பேசியதாவது:

சேலம் மாவட்டம் திமுக வளா்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்திய பூமியாகும். நீதிக்கட்சியை திராவிடா் கழகமாக மாற்றிய ஊா். தொடா்ந்து திராவிடா் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறையைக் கண்டவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இப்போது பூச்சாண்டி காட்டுவது போல பலா் களத்தில் நிற்கின்றனா். ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை எதிா்த்து களம் கண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தோம். இப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே தலைவா் மு.க.ஸ்டாலின். திமுகவை அசைத்துப் பாா்க்கலாம் என பாஜக கணக்குப் போடுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோா் இல்லை. ஆனால் கட்சி இருக்கிறது. அண்ணா, கருணாநிதி காலத்தை விட கட்சிப் பலமாக இருக்கிறது. எதிா்க்கட்சியினா் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது என்றாா்.

இதில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பேசியதாவது:

நாங்கள் பெற்ற பிள்ளைக்கு பெயா் வைப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியுள்ளாா். திமுக ஆட்சிக் காலத்தில் கட்டிய சென்னை கோயம்பேடு, ராஜீவ்காந்தி மருத்துவமனையை அதிமுகவினா் திறந்து வைத்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்திற்கு கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளாா். இன்னும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT