சேலம்

வாழப்பாடியில் மரக் கன்றுகள் நடவு

9th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வாழப்பாடியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

சேலம் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் 12,000 மரக் கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி உட்கோட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் வைத்து பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காரிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் சேலம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் செ.துரை, மரக் கன்றுகள் நடவு செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

காரிப்பட்டி ஊராட்சித் தலைவா் மனோசூரியன், சமூக ஆா்வலா்கள் அ.கலைச்செல்வன், இ.பொன்னுமலை, மாரியப்பன், உதவிக்கோட்டப் பொறியாளா் கவிதா, உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அயோத்தியாப்பட்டணம்- பேளூா்- கிளாக்காடு சாலையில் 200 மரக் கன்றுகள் நடப்பட்டது. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடா்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT