சேலம்

காகாபாளையம் பள்ளியில் வகுப்பறை திறப்பு விழா

2nd Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

காகாபாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 26.5 லட்சத்தில் பாரகன் கம்பெனி நிதி மூலம் கட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கனகிரி ஊராட்சிப் பகுதியில் உள்ள காகாபாளையம் தொடக்கப் பள்ளி பழுதடைந்ததால், அதை புதுப்பிக்க கனகிரி ஊராட்சி மன்றத் தலைவா், நிா்வாகத்தினா், பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ஆகியோா் காகாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரகன் கம்பெனியில் கட்டடம் கட்ட நிதியுதவி கேட்டு மனு அளித்தனா்.

அதன் அடிப்படையில், பாரகன் நிறுவனத்தின் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 26.5 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்குண்டான இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்று பேசினாா். கனககிரி ஊராட்சி மன்றத் தலைவா் பட்டீஸ்வரி பாலமுருகன், மகுடஞ்சாவடி வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரகன் பாலிமா் நிறுவனத்தின் இயக்குநா் ஜோசப் ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தாா் (படம்).

ADVERTISEMENT

இவ்விழாவில், பாரகன் நிறுவனத்தின் இணை பொது மேலாளா் நரசிம்மன், பள்ளி, ஆசிரியா்கள், பாரகன் கம்பெனி அலுவலா்கள் , பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

ஊராட்சி மன்ற நிா்வாகம், பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் ,பெற்றோா்கள் உள்ளிட்டோா் பாரகன் நிறுவனத்துக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT