சேலம்

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 100 ஜோடிகளுக்கு திருமணம்

2nd Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில், வைகாசி முகூா்த்தத்தில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

அக்னி நட்சத்திர முடிவுக்கு பிறகு வைகாசி மாதத்தில் முதல் சுபமுகூா்த்த தினம் என்பதால், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில், வியாழக்கிழமை 70 பதிவுபெற்ற திருமணங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மணக்கள் வீட்டாா் மற்றும் உறவினா்கள் வருகையால் அதிகாலையில் இருந்தே கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாழப்பாடி காசிவிஸ்வநாதா், ஏத்தாப்பூா் சாம்பவ மூா்த்தீஸ்வரா், சென்றாயப் பெருமாள் கோயிலிலும் ஏராளமான திருமணங்கள் நடந்தேறின.

ADVERTISEMENT
ADVERTISEMENT