சேலம்

கே.மேட்டுப்பாளையம் ஸ்ரீஒங்காளியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

1st Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீஒங்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

குடமுழுக்கு விழாவினையொட்டி, புதன்கிழமை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்தனா். அதனையடுத்து, விநாயகா், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு முதல்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு 2-ஆம் கட்ட யாகசாலை பூஜை நடைபெற்று காலை 9 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT