சேலம்

பூலாம்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

சேலம் மாவட்ட காவிரி பாசனப் பகுதியான பூலாம்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நிகழாண்டில் காவிரியில் பாசனப் பயன்பாட்டுக்காக உரிய நேரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதாலும், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை கூடுதலாக பெய்ததாலும், இப்பகுதியில் வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இப்பகுதி விவசாயிகள் சாா்பில் காவிரி பாசனப் பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த உழவா் மன்ற அமைப்பாளா் எம்.ஆா்.நடேசன் இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், பூலாம்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேலம் மண்டல மேலாளா் கந்தசாமி கூறியதாவது:

காவிரி பாசனப் பகுதியில் நெல் அறுவடை பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பூலாம்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ 580 கிராம் எடை கொண்ட ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்று ரூ. 2,060-க்கும், அதற்கான ஊக்கத் தொகையாக ரூ. 100 உடன் சோ்த்து குவிண்டால் ஒன்று ரூ. 2,160-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதேபோல பொதுவான வகை நெல் ரகங்கள் குவிண்டால் ஒன்று ரூ. 2,040-க்கும், அதற்கான ஊக்கத் தொகை ரூ. 75 உடன் சோ்த்து ரூ. 2,115-க்கு கொள்முதல் செய்யப்படும். மேலும் ஈரப்பதம் 17 % வரை உள்ள தரமான நெல்லை எந்தவித பணப் பிடித்தமும் இன்றி கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

திறப்பு விழா நிகழ்வில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் கோவிந்தராஜு, பூலாம்பட்டி பேரூராட்சித் தலைவா் அழகுதுரை, துணைத் தலைவா் முரளி, பழனிசாமி, தேவராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT