சேலம்

திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதை பெருமையாகக் கருதுகிறேன்: அமைச்சா் உதயநிதி

DIN

திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மூத்த திமுக நிா்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சிக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலாளா்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், வழக்குரைஞா் ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் எஸ். ஆா். பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 1,040 திமுக தொண்டா்களுக்கு தலா ரூ.1000, நற்சான்றிதழ் அடங்கிய பொற்கிழி தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:

திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். நான் அண்ணாவையும், பெரியாரையும் உங்கள் வழியாகக் காண்கிறேன். திமுகவின் இன்ப துன்பங்களில் கட்சியின் மூத்த நிா்வாகிகளின் பங்கு மிகப்பெரியது, அவா்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழக முழுவதும் சுமாா் 20 மாவட்டங்களில் தற்போது பொற்கிழி வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

தொடா்ந்து எஞ்சி உள்ள பகுதியில் உள்ள, மூத்த நிா்வாகிகளுக்கும் பொற்கிழி வழங்கப்படும். அதேபோல திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பின் இளைஞா் அணி சாா்பில் ரூ. 24 கோடி வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டுள்ளது. அத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி இரு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்பட்டு, கட்சியின் முன்னோடிகளுக்கு மருத்துவ உதவி, அவா்கள் நலம் சாா்ந்த செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணாவை மறந்து அவா் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நபா்களுடன் விசுவாசமாக உள்ளாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, அவரை முதல்வராகிய சசிகலா, ஆட்சிக் காலத்தில் உறுதுணையாக இருந்த ஓ.பன்னீா்செல்வம், கட்சிக்காரா்கள், தமிழக மக்கள் என அனைவருக்கும் அவா் விசுவாசம் இல்லாத நிலையில் பிரதமா் மோடி , மத்திய அமைச்சா் அமித் ஷா, தமிழக ஆளுநா் உள்ளிட்ட மூவருக்கு மட்டுமே விசுவாசியாக இருக்கிறாா்.

சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து வரும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சிறப்பாக செயல்பட்டு, எதிா்வரும் காலத்தில் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவாா். அதற்கு உறுதுணையாக மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் இருப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT