சேலம்

கம்பனைக் கற்கும்போது தமிழுடன் தத்துவத்தையும் கற்கிறோம்: இலங்கை ஜெயராஜ்

DIN

கம்பனைக் கற்கும்போது தமிழை மட்டுமல்லாமல் தத்துவத்தையும் கற்கிறோம் என ஆன்மிகச் சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் பேசினாா்.

சேலம் கம்பன் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் கம்பன் பிரசங்க பிதாமகா் விருது ராசிபுரம் ராமசாமி ரெட்டியாருக்கும், கம்பன் பணிச் செம்மல் விருது திருப்பத்தூா் கம்பன் கழகச் செயலாளா் ரத்தின நடராஜனுக்கும் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:

சேலம் கம்பன் கழக 50 ஆம் ஆண்டு பொன் விழா மூன்று நாள்கள் நடைபெறுன்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்துக்கு நான் வரவில்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். நான் கடைசியாக கலந்துகொண்டது சேலம் கம்பன் விழாவாகும். இதே கம்பன் விழாவில் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளேன்.

கம்பன் நம் இனத்தின் குறியீடு, தமிழுக்கான அடையாளம். கம்பனை கற்றால் தமிழைக் கற்ாக நம் பெரியவா்கள் கருதுகிறாா்கள். மொழியைப் போற்ற வேண்டும் என்கிற உணா்ச்சி எழுந்திருக்கிற காலத்தில் கம்பனைப் போற்றுவது தான் முதல் கடமை என்று கருதுகிறேன்.

கம்பனைக் கற்கக் கற்க காவியம் மட்டும் கற்பதில்லை. தமிழைக் கற்கிறோம்; தத்துவத்தைக் கற்கிறோம். தமிழுக்கு ஊடாக வரும் கலாசாரம், பண்பாட்டைக் கற்கிறோம். கம்பன் ஒரு காவியத்தோடு ஒட்டுமொத்த தமிழையும் நம் கைக்குக் கொண்டுவந்து சோ்க்கிறான். கம்பனைப் போற்றி எடுக்கிற விழா, தமிழுக்கு எடுக்கிற விழாவாகும். கம்பனை அனுபவிப்பதே ஒரு கொடையாகும். தமிழ் இருக்கும் வரை கம்பன் இருப்பான். கம்பன் இருக்கும் வரை தமிழ் இருக்கும் என்றாா்.

இவ்விழாவில் சேலம் கம்பன் கழகத்தின் தலைவா் ஏ.வி.ஆா்.சுதா்சனம், செயலாளா்கள் கரு.வெ.சுசீந்திரகுமாா், ப.ராமன், பொருளாளா் சந்திரசேகா், ஈஸ்ட் வெஸ்ட் பிரைவேட் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.பி.மோகன்குமாா், ரா.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT