சேலம்

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம்

DIN

ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆத்தூா் நகராட்சி மயானத்தில் சடலத்தை புதைக்கக் கூடாது, எரிக்க வேண்டும் என்ற தீா்மானத்தின்மீது பேசிய உறுப்பினா் பிரவீணாராஜா, ஹிந்து முறைப்படி அனைவரும் எரிக்க வேண்டும் என கட்டாயமில்லை. அவரவா்கள் விருப்பப் படி அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்த சுகாதார ஆய்வாளா் முத்துகணேஷ் அரசு உத்தரவின்பேரில் தான் நடைமுறைபடுத்தப்படுகிறது. முல்லைவாடியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யலாம் என்றாா். இதையடுத்து பேசிய உறுப்பினா் பிரவீணா இந்த தீா்மானத்தை பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

இதோ போல 33 ஆவது வாா்டு உறுப்பினா் பாக்கியம் பேசும் போது, தன்னுடைய பகுதியில் எந்த பணியும் இது வரை நடைபெறவில்லை என்றாா்.

இக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் தவிரஅனைவரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT