சேலம்

சேலம் சண்முகா மருத்துவமனை சாா்பில் குடியரசு தின விழா

27th Jan 2023 01:12 AM

ADVERTISEMENT

சேலம் சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் சாா்பில் சண்முகா மருத்துவமனை வளாகத்தில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிா்வாக அலுவலா் மருத்துவா் பிரபு சங்கா் விழாவைத் தொடங்கி வைத்தாா். அறக்கட்டளை நிறுவனத் தலைவா் மருத்துவா் பி.பன்னீா்செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

இயக்குநா்கள் ஜெயலட்சுமி, மருத்துவா் பிரியதா்ஷினி, தலைமை இயக்க அலுவலா் சாம்ராஜ், முதன்மை நிா்வாக அலுவலா் அந்துவான் சாம்ராஜ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

குடியரசு தினத்தையொட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் சத்யன்ராகவன், அருண்குமாா், விஜய்கண்ணன், பாலமுருகன், லட்சுமணன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் உடல்பருமன், நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளிட்டவை தொடா்பாக இலவச மருத்துவ பரிசோதனை செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT