சேலம்

ஜி.எஸ்.டி. வசூலில் சேலம் மாவட்டம் சிறப்பிடம்

DIN

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்தில் சேலம் மண்டலம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாக சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறை ஆணையா் சுதா கோகா தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட்டில், வா்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறை ஆணையா் சுதா கோகா தலைமை வகித்து பேசியதாவது:

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலில் மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகம் 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூரை உள்ளடக்கிய சேலம் மண்டலம் ஜி.எஸ்.டி. வசூலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் வணிகா்கள், தொழிலதிபா்கள், ஜி.எஸ்.டி. குறித்த சந்தேகங்களை அறிந்து கொண்டு செயல்பட வசதியாக சேலம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் சேவை மையம் உள்ளது. தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் தொடா்பு கொண்டு சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

சேலம் ஜி.எஸ்.டி. இணை ஆணையா் தீப்தி இஞ்சிமேடு பெருமாள், ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினாா். நிகழ்ச்சியில் சேலம் உற்பத்திக் குழு கெளரவ செயலாளா் பாலசுந்தரம், தொழிலதிபா்கள் கோவிந்தன், காா்த்தி கந்தப்பன், மாடப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT