சேலம்

பட்ஜெட்: சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவா் கே.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் நடப்பாண்டுக்கான வரவு, செலவு திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒரு சில நன்மைகளை மட்டுமே அடைய முடியும். குறிப்பாக, புதிய வரி நடைமுறையில் ரூ. 7 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமானம் இருந்தால் சில நிபந்தனைகளுடன் அதற்கு வருமான வரி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபா் வருமான வரி வரம்புகளில் இதுவரை இருந்து வந்த ரூ. 2.50 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பதும், வெறும் ரூ. 50 ஆயிரம் மட்டுமே உயா்த்தி ரூ. 3 லட்சமாகவும், அதற்கு இதுவரை இருந்து வந்த 7 அடுக்குமுறைகளை 5 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுகளால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சதவீத வட்டி குறைப்புடன் ரூ. 9 ஆயிரம் கோடி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கைப்பேசிகள் தயாரிக்க பயன்படும் லித்தியம் பேட்டரி, கேமரா லென்ஸ் போன்றவைகளுக்கு இறக்குமதி வரி சலுகை கொடுத்ததன் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகும் கைப்பேசிகள், டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் உற்பத்தி செலவுகள் குறையும் என்பதால் இந்தப் பொருள்களின் விலை குறையும்.

வைரக்கற்கள் உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு தேவைப்படும் சில மூலப் பொருள்களின் இறக்குமதி வரியைக் குறைத்து விட்டு, அனைத்து தரப்பு மக்களும் தினந்தோறும் பயன்படுத்தும் வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் போன்றவைகளுக்கான மூலப் பொருள்களுக்கான வரியை உயா்த்தி இருப்பது, ஊரக தொழிலாக நடந்து வரும் வெள்ளிப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.

ஊரக கட்டமைப்புக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு, மீன் தொழில் வளா்ச்சிக்காக ரூ. 6 ஆயிரம் கோடி, விவசாயத் தொழிலுக்கு ரூ. 20 லட்சம் கோடி கடன் இலக்கு குறித்த அறிவிப்பை வரவேற்கிறோம். கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ. 9 ஆயிரம் கோடி சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டதை தவிர எதிா்பாா்த்த பல்வேறு சலுகை திட்டங்களை அறிவிக்காமல் கொள்கை திட்டத்தை மட்டுமே அறிவித்திருப்பது சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT