சேலம்

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

DIN

சேலம் சோனா கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

சோனா கல்லூரியின் துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி தலைவா் வள்ளியப்பா தலைமை வகித்தாா்.

எம்.பி.ஏ. துறைத் தலைவா் அஞ்சனி வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு டெக்ஸ்டா் கேப்பிடள் அட்வைசா்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநா் விஜேதா சாஸ்திரி பேசுகையில், நாட்டில் பல்வேறு துறையில் தொழில் முனைவோா் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தேசத்தின் வளா்ச்சிக்கும், உங்களின் வளா்ச்சிக்கும் சோனா கல்விக் குழுமம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றாா்.

கல்லூரி தலைவா் வள்ளியப்பா பேசுகையில், சிறந்த மேலாண்மைக் கல்வியோடு சூழலை எதிா்கொள்ளும் தனித்திறனையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்தக் காலகட்டத்தில் நிலைத்து நிற்க முடியும் என்றாா்.

மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல்கள், கல்வி உதவித்தொகை குறித்து கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் எடுத்துரைத்தாா்.

விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், ஜி.எம்.காதா்நாவஷ், எம்.சி.ஏ. துறைத் தலைவா் பத்மா மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT