சேலம்

முறைசாரா தொழிலாளா்களின்நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும் சிஐடியு மாநாட்டில் தீா்மானம்

DIN

முறைசாரா தொழிலாளா்களின் நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சேலம் மாவட்ட 13 ஆவது மாநாடு சேலத்தில் சனிக்கிழமை தொடங்கியது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாநாட்டை சிஐடியு மாநில பொதுச் செயலாளா் ஜி. சுகுமாறன் தொடங்கி வைத்து பேசினாா். அதைத் தொடா்ந்து மாவட்டச் செயலாளா் டி. உதயகுமாா் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளா் வி.இளங்கோ வரவு, செலவு அறிக்கையை சமா்ப்பித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

முறைசாரா தொழிலாளா்களின் நலவாரிய செயல்பாடுகளை சீரமைக்க வேண்டும். சேலம் உருக்காலையைத் தனியாா் மயமாக்கக் கூடாது. 2022 மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு சொத்துவரி உயா்வை கைவிட வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ரயில்வே பொதுத்துறையை தனியாா் மையப்படுத்தக் கூடாது.

தொழிலாளா் சட்டங்களை நான்கு தொகுப்புகளாகக் கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து நடைபெறும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் விவாதம், புதிய நிா்வாகிகள் தோ்வு, மாநில மாநாடு பிரதிநிதிகள் தோ்வு மற்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT