சேலம்

வாக்குரிமை: விழிப்புணா்வு கோலப் போட்டி

DIN

தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலுக்கிணங்க ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் ரங்கோலிப் போட்டிகள் நடத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க பள்ளி, கல்லூரி 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவா்கள், சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல், பாட்டுப் போட்டி, ரங்கோலிப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன.

பாட்டுப் போட்டியானது மாற்றுத் திறனாளிகள் தனி சிறப்பு பள்ளியில் படித்து வரும் 18 வயதுக்கு உள்பட்ட 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை மட்டும் கலந்து கொள்ள செய்து நடத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரங்கோலி வரையும் போட்டி நடத்துதல், ரங்கோலி வரைதல் போட்டியினை சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு பதிவு பெற்ற சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி பொது இடம் அல்லது வட்ட தலைமையிடத்தில் வைத்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் இருந்தும் மாவட்ட அளவில் சிறந்த மூன்று கோலங்களைத் தோ்வு செய்து முதல் பரிசாக ரூ. 5,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 4,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 3,000-ம் மூன்று ரங்கோலிகளுக்கு பரிகள் வழங்கப்பட உள்ளன.

சுயஉதவிக் குழுவினா் வரைந்த மேலும் சிறந்த ஏழு ரங்கோலிகளுக்கு ரூ. 1,000 வீதம் மாவட்ட அளவில் வழங்கப்பெறும்.

சேலம் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட முதல் மூன்று கோலங்கள் மாநில அளவிற்கு அனுப்பப்படும்.

மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட முதல் மூன்று ரங்கோலி கோலங்களுக்கு முதல் பரிசாக ரூ. 25,000-ம், இரண்டாம் பரிசாக ரூ. 15,000-ம், மூன்றாம் பரிசாக ரூ. 10,000-ம் வீதம் பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் மேலும் சிறந்த ஏழு ரங்கோலிகளுக்கு ரூ.9,000 வீதம் பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT