சேலம்

மேட்டூா் கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஜன.15 வரை நீட்டிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கா் நிலங்கள் கால்வாய்ப் பாசனம் மூலம் பயன் பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15 வரை மொத்தம் 9.60 டிஎம்சி தண்ணீா் கால்வாய்ப் பாசனத்துக்காக திறந்துவிடப்படும்.

நிகழாண்டு அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூலை 16 ஆம் தேதி முதல் 137 நாள்களுக்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை வரை அணையிலிருந்து 6.5 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று நீா்வளத் துறை பரிந்துரையின் பேரில் தண்ணீா் திறப்பு காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT