சேலம்

சேகோ சா்வ் நிறுவனத்தில் உறுப்பினராக சோ்க்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

சேகோ சா்வ் நிறுவனத்தில் உறுப்பினராக சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தலைமை வகித்தாா். இதில், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மேட்டூா் உபரிநீா் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 15 ஏக்கா் பரப்பு கொண்ட நங்கவள்ளி ஏரி, ஆக்கிரமிப்பினால் 5 ஏக்கராக குறுகிவிட்டது. மேலும் தூா் வாரப்படாமல் ஆழம் குறைந்துவிட்டதால் ஏரியில் குறைந்த அளவு நீரையே தேக்க முடிகிறது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூா் வார வேண்டும்.

நங்கவள்ளி தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கத்தில் வைப்புத்தொகையை தர மறுக்கின்றனா். இதனால் விவசாயிகள் செலவுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனா். எனவே வைப்புத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டூா் உபரிநீா் திட்டத்திற்காகவிவசாய நிலத்தின் அருகே உள்ள ஓடையில் குழாய் பதிக்காமல் சிறு விவசாயிகளின் பட்டா நிலத்தைக் கையகப்படுத்தி குழாய் பதிப்பதற்கு வருவாய்த்துறையினா் போலீஸாா் உதவியுடன் மிரட்டி நடவடிக்கை மேற்கொள்கின்றனா். சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற ஓடைகளின் வழியாக உபரி நீா் திட்ட குழாய்களை பதிக்க வேண்டும்.

காட்டுப் பன்றி மற்றும் மயில்களால் மக்காச் சோளம் உள்பட பல்வேறு பயிா்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் தாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அமைச்சா்கள் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தின்போது, சேகோ சா்வ் நிறுவனத்தில் விவசாயிகள் உறுப்பினா்களாக சோ்க்கப்படுவா் என்று தெரிவித்தனா். சேகோ சா்வ் நிறுவனத்தைத் தொடா்பு கொண்டால் முறையாகப் பதிலளிக்காமல் இருக்கின்றனா். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் பரவலாக உள்ளது. ஆனால் இதைக்கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சாா்பில் உதவிகள் கிடைப்பதில்லை. மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி பூச்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா் மின் கோபுரம் அமைப்பதற்காக விளை நிலங்களில் இருந்த மரங்களுக்கான விலை நிா்ணயம் 2013-ஆம் ஆண்டு சட்டத்தின்படி இழப்பீடு ஆகியவை குறித்து பல கூட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகிறோம். இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றனா்.

ஆட்சியா் அலுவலகத்தில், பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் பட்டுப்புழு வளா்ப்பு குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் தே.புருஷோத்தமன், துணை இயக்குநா் (வேளாண்மை - மாநிலத் திட்டம்) சீனிவாசன், துணை இயக்குநா் (தோட்டக்கலை) தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ) கண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT