சேலம்

கொளத்தூரில் கஞ்சா செடி வளா்த்தவா் தலைமறைவு

DIN

கொளத்தூா் அருகே மிளகாய்த் தோட்டத்தில் கஞ்சா வளா்த்த விவசாயி தலைமறைவாகி விட்டாா்.

கொளத்தூா் அருகே உள்ள கோவிந்தபாடியில் மிளகாய்த் தோட்டத்தில் விவசாயி ஒருவா் கஞ்சா செடிகளை வளா்ப்பதாக கொளத்தூா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. மேட்டூா் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளா் சண்முகம் உத்தரவின்படி கொளத்தூா் காவல் ஆய்வாளா் சுப்புரத்தினம் மற்றும் போலீஸாா் கோவிந்தபாடி சென்றனா்.

அங்குள்ள மிளகாய் தோட்டங்களில் சோதனையிட்டனா். குருசாமியின் மகன் ராமன் (58) என்பவரின் மிளகாய்த் தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாா் தோட்டத்தை சோதனையிடுவதைப் பாா்த்த ராமன் தலைமறைவாகிவிட்டாா். போலீஸாா் கஞ்சா செடிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனா். ராமன் தனது சொந்த உபயோகித்திற்காக மிளகாய்த் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைத் தேடி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT