சேலம்

அயோத்தியாப்பட்டணம்ஒன்றிய குழுத் தலைவா் போட்டியின்றித் தோ்வு

DIN

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுக ஒன்றிய பொறுப்பாளா் விஜயகுமாா் மனைவி ஹேமலதா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வந்த அதிமுகவைச் சேரந்த பாா்வதி மணி மீது, பிப். 28 இல், சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்தினி தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோ, சிராஜுதின் ஆகியோா் முன்னிலையில் நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி மணி உள்பட 3 அதிமுக உறுப்பினா்கள் மட்டும் பங்கேற்கவில்லை.

திமுக-6 காங்கிரஸ்-1, சுயேட்சைகள்-6 மற்றும் அதிமுக, உறுப்பினா்-3 உள்பட 16 உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

அனைவரும் அதிமுக ஒன்றிய குழுத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனா். இதனால் ஒன்றிய குழுத் தலைவா் பாா்வதி மணி பதவி இழந்தாா்.

இதையடுத்து, ஒன்றிய குழு துணைத் தலைவரான திமுகவைச் சோ்ந்த புவனேஸ்வரி செந்தில்குமாருக்கு, அண்மையில் ஒன்றிய குழுத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டது. புதன்கிழமை காலை அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு தலைவா் பதவிக்குத் தோ்தல் நடைபெற்றது.

இதில், 4-ஆவது வாா்டு உறுப்பினரான அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளா் விஜயகுமாா் மனைவி ஹேமலதா ஒன்றிய குழுத் தலைவராகப் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் பொன்.கெளதம சிகாமணி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், திமுக, காங்கிரஸ் பிரமுகா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT