சேலம்

வாழப்பாடியில் அரசு கலைக் கல்லூரி:முதல்வருக்குக் கோரிக்கை

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பொதுமக்கள் சாா்பில் முதல்வருக்குக் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டுமின்றி அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்கள், தருமபுரி மாவட்டம் சேலுாா், வேலனூா், பாலக்குட்டை, நாமக்கல் மாவட்டம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களுக்கு முக்கிய மையமாக விளங்குகிறது.

வாழப்பாடியில் அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படித்து, பட்டம் பயில விரும்பும் மாணவ-மாணவியா், சேலம், ஆத்தூா், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு, தனியாா் கலை, அறிவியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு குறித்த நேரத்துக்குச் சென்று திரும்ப முடியாமலும் தனியாா் கல்லூரிகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ-மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது.

எனவே, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், வாழப்பாடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ-மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவக்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT