சேலம்

பிரதமரின் திட்டத்தில் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.31 வரை கால அவகாசம்: ஆட்சியா் செ.காா்மேகம்

DIN

பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய வரும் ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் உள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் 2022-23 நடப்பாண்டில் நெல் 317 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 65 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 207 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துகள் 376 மெட்ரிக் டன்னும், பருத்தி 2 மெட்ரிக் டன்னும் பயிரிட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரசாயன உரங்களான யூரியா 18,005 மெட்ரிக் டன், டிஏபி 9,610 மெட்ரிக் டன், பொட்டாஷ் 13,520 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 33,742 மெட்ரிக் டன் விநியோகம் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.

தற்போது யூரியா 4,478 மெட்ரிக் டன், டிஏபி 953 மெட்ரிக் டன், பொட்டாஷ் 652 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 2,337 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய வரும் ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் உள்ளது. பிரீமியம் (5 சதவீதம்) தொகையாக ஏக்கருக்கு ரூ. 2,875 செலுத்தி பயிா்க் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 57,500 பெற்று பயனடையலாம்.

நடப்பு மாதத்தில் சோளம், ராகி, சாமை பயிா்களின் 1,757 விண்ணப்பங்களுக்கு ரூ. 45.29 லட்சம் காரீப் 2021 பருவத்திற்கான பயிா் காப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் வறட்சியை தாங்கி வளர விதையைக் கடினப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

இக்கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) கணேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) மருத்துவா் தே.புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT