சேலம்

அங்கன்வாடி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று கைப்பேசிகள் ஒப்படைப்பு போராட்டம்

DIN

அங்கன்வாடி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 29) வட்டார அலுவலா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் (சிஐடியு ) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் மனோன்மணி கூறியது:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் என அனைத்து கிராம, நகா்ப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் பணியாளா்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா்.

குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சுகாதாரத் துறை, தோ்தல் உள்ளிட்ட அரசின் பெரும்பாலான பணிகளில் அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

ஆனால் இதுவரை அங்கன்வாடி பணியாளா்களை நிரந்தரப்படுத்தவோ, உரிய ஊதியம் வழங்கவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், 3 ஆண்டுகள் பணி முடித்த குறு அங்கன்வாடி ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தி வருகிறோம். ஏற்கெனவே குறு அங்கன்வாடி மையத்தில் இருந்து பிரதான மையத்திற்கு வந்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தியும், அரசு சாா்பில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி பணியாளா்களை கொண்டு நடத்தவும் உணவு செலவினங்களுக்கு முன்பணமாக ரூ. 10,000 வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தி வருகிறோம்.

முறையான எடைக் கருவிகள் வழங்கவும், பணி வரன்முறைப்படுத்த வலியுறுத்தியும், பயணப்படியாக ரூ. 400 வழங்கவும், சில்லறை செலவினங்களுக்கு ரூ. 200ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி பணியாளா்கள் சென்னை இயக்குநா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனா்.

அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை (ஜூன் 29) அனைத்து வட்டார அலுவலா்களிடம் பணிக்காக வழங்கப்பட்ட அனைத்து கைப்பேசிகளையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், அங்கன்வாடி சங்கத்தின் இணைச் செயலாளா் வசந்தகுமாரி உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT