சேலம்

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

24th Jun 2022 05:07 PM

ADVERTISEMENT

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு எதிரான திட்டம் என்பதோடு வருங்கால தேர்தலை மனதில் வைத்து இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் பாஜக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஜனநாயக குரல்வளையை நசுக்கும் வகையில் அமல்படுத்தப்பட உள்ள திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் இதற்கான போராட்டத்தை அறிவித்துள்ளது. வருகின்ற 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வுக்கு கொண்டுவர வேண்டும். 

இதையும் படிக்க- திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்பு

ADVERTISEMENT

கருத்து வேறுபாடுகளை களைந்து கட்சியை வழிநடத்த முன்வரவேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அனைத்து மாநிலத்திலும் தனது சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது. மகராஷ்டிர மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து நளினியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபனை இல்லை. 

மேலும் கோவையில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக லாக்கப் மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பேட்டியின் போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT