சேலம்

அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

7th Jul 2022 01:17 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவா் அ.சங்கா் என்ற ரவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

புதிய தலைவராக வழக்குரைஞா் ஆா்.ரவி, செயலாளராக ராசி சந்திரன், பொருளாளராக கல்லை கே.கருப்பண்ணன் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். முதியோா் இல்லம், அனாதை ஆசிரமம் ஆகியவற்றுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதிய நிா்வாகிகளை முன்னாள் நகா்மன்றத் தலைவா் காட்டுராஜா (எ)எம்.பழனிசாமி, நரசிங்கபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், முன்னாள் நிா்வாகிகள் பாபு, பிஆா்எஸ்.பாண்டியன், நூத்தப்பூராா் துரை உடையாா், ஏ.வி.மூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT