சேலம்

மேட்டூர்:  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

5th Jul 2022 11:53 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டுரை அடுத்த நங்கவள்ளியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அறிவித்தபடி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். மகளிருக்கு ரூ 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்ய வேண்டும் உட்பட  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

ADVERTISEMENT

நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு சேலம் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.சூதீர் முருகன் தலைமை வகித்தார், மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ஹரிராமன் வரவேற்றுப் பேசினார். சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்ஸ்சரண், பொதுக்குழு உறுப்பினர் என்.அண்ணாதுரை, நங்கவள்ளி கிழக்கு மண்டல தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT