சேலம்

மேட்டூரில் 2ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரதம்

1st Jul 2022 02:17 AM

ADVERTISEMENT

 

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மேட்டூரில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மருத்துவா்களுக்கான சட்ட போராட்டக் குழுவினா் உண்ணாவிரம் மேற்கொண்டனா்.

மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டியில் மறைந்த அரசு மருத்துவா்கள் சங்க தலைவா் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதன் செயலாளா் தாஹிா், பொருளாளா் நளினி , மறைந்த மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யா ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.

2 ஆம் நாளான வியாழக்கிழமை சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கத் தலைவா் ரவீந்திரநாத், பொது பள்ளி கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோா் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ஊதிய உயா்வுக்கான அரசாணை 354-ஐ உடனடியாக அமல்படுத்தி, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தன் அவா்களின் மனைவிக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டம் குறித்து பேசிய மருத்துவா் ரவீந்திரநாத், ‘ ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவா்களின் கோரிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவா்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT