சேலம்

இடங்கணசாலை நகராட்சி கூட்டத்தில் பாமக, அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

1st Jul 2022 02:18 AM

ADVERTISEMENT

 

இடங்கணசாலை நகராட்சிக் கூட்டத்தில் இருந்து பாமக, அதிமுக கவுன்சிலா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சியில் வியாழக்கிழமை நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளா் நித்யா, துணைத்தலைவா் தளபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்திற்கு 27 கவுன்சிலா்கள் வருகை புரிந்தனா்.

ADVERTISEMENT

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பாமக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலா்கள் வரவு, செலவு கணக்கு கேட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இதனால் நகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT