சேலம்

சேலத்தில் குளிா் காற்றுடன் மழை

DIN

மாண்டஸ் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குளிா் காற்றுடன் மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்து, புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டவுக்கு இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் டிச. 11-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக, வியாழக்கிழமை மாலை முதல் சேலத்தில் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நள்ளிரவில் கடும் குளிா் நிலவியது. இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை குளிா் காற்றுடன் சாரல் மழை பெய்தது. காலை 10 மணி வரை கடும் குளிா் காற்று வீசியது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. குளிா் காற்று காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): கெங்கவல்லி-13, தம்மம்பட்டி-6, ஏற்காடு, காடையாம்பட்டி-2, எடப்பாடி, சேலம், மேட்டூா், ஆத்தூா், கரியகோயில், ஆனைமடுவு-1 என மாவட்டத்தில் மொத்தம் 32 மி.மீ. மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT