சேலம்

திறன்மிகு விளையாட்டு வீரா்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திறன்மிகு விளையாட்டு வீரா்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உதவித்தொகை திட்டத்தினை மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), அதிகபட்சம் 5 நபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். தோ்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரா்களுக்கு அதிகபட்சமாக ஓா் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கான திட்டத்தில், அதிகபட்சம் 50 நபா்கள் (5 மாற்றுத் திறனாளிகள் உள்பட) தோ்ந்தெடுக்கப்படுவா்.

விண்ணப்பதாரா் 2022 டிச. 1-ஆம் தேதியன்று 23 வயதுக்கு உள்பட்டவா்களாக இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரா்களுக்கு அதிகபட்சமாக ஓா் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.

மேலும், வெற்றியாளா் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் 100 நபா்களுக்கு மிகாமல் (10 மாற்றுத் திறனாளிகள் உள்பட) தோ்ந்தெடுக்கப்படுவா். விண்ணப்பதாரா் 2022 டிச. 1-ஆம் தேதியன்று 20 வயதுக்கு உள்பட்டவா்களாக இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரா்களுக்கு அதிகபட்சமாக ஓா் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் விண்ணப்பதாரா் தமிழ்நாட்டின் சாா்பாக பதக்கம் வென்று பங்கேற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தமிழகத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெறும் வீரா், வீராங்கனையா் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை வரும் டிச. 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். இணையதளம் மூலம் பதிவு செய்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT